CINEMA
இணையத்தில் leak-ஆனது “தளபதி 66” விஜய்யின் புகைப்படம்..
“தளபதி 66” திரைப்படத்தின் நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 66” திரைப்படம் பூஜை ஆரம்பித்த சூட்டோடே படப்பிடிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாகவும் வேகமாகவும் நடந்து வருவதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பாடல்கள் ஒலிப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் “தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த அனசுயா அட்டா என்பவருக்கு விஜய் வீடியோ கால் செய்துள்ளார். அப்புகைப்படங்களை அவர் தனது வாட்ஸ் ஆப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார்.
அதில் விஜய் அழகான தாடியில் நீல கலர் சட்டையுடனும் அதன் உள்ளே வெள்ளை கலர் டி-சர்ட்டுடனும் தென்படுகிறார். அந்த வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் “நடிகர் விஜய் என்னுடைய மகன் மற்றும் மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ காலில் தெரிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thalapathy66 @actorvijay Look ❤️
Thalapathy Vijay On Video Call In The Shoot Of #Thalapathy66 !!#Beast @actorvijay @BussyAnand pic.twitter.com/HA35D8oX1m— Theni YouthWing VMI Official (@TheniYouthWing) May 10, 2022