Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஜல்லிக்கட்டுன்னா என்னன்னு தெரியுமா? விக்கிக்கு பாடம் எடுத்த ஆண்டவர்..

CINEMA

ஜல்லிக்கட்டுன்னா என்னன்னு தெரியுமா? விக்கிக்கு பாடம் எடுத்த ஆண்டவர்..

ஜல்லிக்கட்டை குறித்து தனக்கு கமல் ஹாசன் தெளிவு படுத்திய வீடியோவை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் கிட்டத்தட்ட 180 நாடுகள் பங்குபெறுகின்றன. அந்நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெறுகின்றனர். இந்தியாவில் இருந்து 30 பேர் பங்குபெறுகின்றனர். இந்த செஸ் போட்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா சென்னையில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் அவ்விழாவில் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது அந்த விழாவில் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் தமிழர்களின் வாணிப அறிவு, தமிழக அரசர்களின் பெருமை, தமிழ் பண்பாடு குறித்து பல காட்சிகள் அடங்கியிருந்தன. அக்காட்சிகளுக்கு பின்னணி குரலாக ஒலித்தார் நடிகர் கமல் ஹாசன். கமல் ஹாசனின் மொழி உச்சரிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கி இருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “கமல் ஹாசனுடன் செலவிட்ட அந்த சிறு நிமிடங்களில் அவர் என்னை ஆட்கொண்டார். அவரின் அறிவும் அவர் அளித்த விளக்கங்களும் அந்த நிமிடங்களை மறக்க முடியாத ஒன்றாக ஆக்கியது” என குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Continue Reading

More in CINEMA

To Top