Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“எல்லாரும் சாப்பிட்டீங்களா?”.. பத்திரிக்கையாளர்களை அன்போடு விசாரித்த நயன்-விக்கி

CINEMA

“எல்லாரும் சாப்பிட்டீங்களா?”.. பத்திரிக்கையாளர்களை அன்போடு விசாரித்த நயன்-விக்கி

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் திருமணத்திற்கு பின்னான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பேசிய நயன்தாரா “எல்லாரும் ஓகே தானே?” என்ற நலம் விசாரிப்புடன் பேச்சை தொடங்கினார்.

மேலும் பேசிய நயன்தாரா “இப்போது எங்களுக்கு திருமணம் ஆகியுள்ளது. இதற்கு முன் நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு போல் மேலும் எங்களுக்கு உங்களது ஆதரவும் ஆசீர்வாதமும் தேவைப் படுகிறது, எல்லாரும் இங்கே கூடியதற்கு மிக்க நன்றி” என கூறினார்.

அதன் பின் பேசிய விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை “சாப்பிட்டீர்களா?”  என கேட்டார். அதன் பின் “எல்லாரும்  இங்கே கூடியதற்கு மிக்க நன்றி. எங்களின் வருங்கால கேரியருக்கு உங்கள் சப்போர்ட் என்றும் எங்களுக்கு தேவை. Keep supporting us” என நெகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரம் ஷெராடான் பார்க் ரிசார்ட்டில் வைத்து நடைபெற்றது. அவர்களின் திருமண விழாவில் ரஜினிகாந்த், அஜித், மோகன் ராஜா, ஐசரி கணேஷ், தொகுப்பாளினி டிடி, ஷாருக் கான் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இத்திருமண நிகழ்வை கௌதம் வாசுதேவ் மேனன் நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் இருந்தே இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரும் Live in உறவில் இருந்து கொண்டு பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர். இந்நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top