CINEMA
விக்னேஷ் சிவனுடன் திருமணம்… ரசிகர்களுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்..
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 வருடங்களாக பழகி வருகின்றனர். இருவரும் ஜோடியாக பல நாடுகளுக்கு சுற்றி வந்து தங்களது காதல் தருணத்தை கொண்டாடி வந்தனர். எப்போதும் இருவருமே நெருக்கமாக இருக்கும் வகையில் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து “க்யூட் கப்பில்” (cute couple) என்ற பெயரையும் பெற்றனர்.
“இருவரும் இப்படி பல ஆண்டுகளாக பழகி வருகிறார்களே, இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்?” என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திருமணம் குறித்து எந்த பதிலையும் இருவரும் கூறாமலே வந்தனர்.
“ஒருவேளை இருவரும் “Living together” ஆகவே கடைசி வரை இருந்து விடுவார்களோ?” என்று கூட ரசிகர்கள் நினைத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது.
பல வருடங்கள் காதல் புறாக்களாக திரிந்தவர்கள் ஜோடியாக இணையவுள்ளனர். ஆம். வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பண்டிதர் இருவரும் திருமணம் செய்வதற்கு உகந்த நாளாக ஜூன் 9 ஆம் தேதியை குறித்துள்ளாராம். மேலும் தனது குடும்பத்தார்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்துள்ளனராம். ஆனால் மாலத்தீவில் வரவேற்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளனராம்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “நானும் ரவுடி தான்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் பத்திக்கிட்டது. சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கினார். இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.