CINEMA
வெற்றி மாறனுடன் கூட்டணி வைக்கும் உதயநிதி… புதிய அப்டேட்
இயக்குனர் வெற்றி மாறனுடன் உதயநிதி கூட்டணி வைப்பதாக ஒரு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இதில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையை தழுவி எழுத்தப்பட்டதாகும். ஒரு பொதுவுடைமைவாத போராளிக்கும் காவலருக்குமான உரையாடலே இச்சிறுகதையின் மையப்பகுதி. ஆனால் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஏற்ப பல சுவாரசியங்களை இணைத்து திரைக்கதையை எழுதியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு இத்திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் “விடுதலை” திரைப்படத்தை பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தையும் உதயநிதி தான் தயாரித்து வருகிறார். மேலும் கார்த்தியின் “சர்தார்”, ஜெயம் ரவியின் “கேப்டன்”, சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளார்.
சமீபத்தில் கூட “குலுகுலு”, “கோப்ரா” போன்ற திரைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் தான் தற்போது “விடுதலை” திரைப்படத்தையும் வெளியிட உள்ளார்.
#Viduthalai#VetriMaaran@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @rsinfotainment @RedGiantMovies_ @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/vGLrqTTw4G
— Udhay (@Udhaystalin) September 1, 2022
விடுதலை” திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஆர். வேல்ராஜ் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.