Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விடுதலை” படம் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?

CINEMA

“விடுதலை” படம் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?

விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “விடுதலை” திரைப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இத்திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது வருகிற ஜூன் மாத இறுதிக்குள் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல் “விடுதலை” திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையை தழுவி எழுத்தப்பட்டதாகும். ஒரு பொதுவுடைமைவாத போராளிக்கும் காவலருக்குமான உரையாடலே இச்சிறுகதையின் மையப்பகுதி. ஆனால் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஏற்ப பல சுவாரசியங்களை இணைத்து திரைக்கதையை எழுதியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய “அசுரன்” திரைப்படம் கூட பூமணி எழுதிய “வெக்கை” நாவலை தழுவி எடுத்த திரைப்படம் தான். “அசுரன்” திரைப்படம் அசுரத்தனமான வெற்றியை பெற்றிருந்தாலும் நாவலில் உள்ளது போன்ற உணர்வுகளை திரைப்படத்தில் வெற்ற் மாறன் கடத்த தவறிவிட்டார் என சில எழுத்தாளர்கள் குறை கூறி வந்ததும் நடந்தன.

“விடுதலை” திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஆர். வேல்ராஜ் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top