CINEMA
வெந்து தணிந்தது காடு, “Single” க்கு ஒரு வணக்கத்த போடு
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் “காலத்துக்கும் நீ வேணும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் எஸ். டி. ஆர். , ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜெயமோகன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் glimpse சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சிம்பு மாறுபட்ட தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து கூலிக்காக மும்பைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவருகிறது. படத்தின் “colour tone” புதிதாகவும் ஒரு வித அழகியல் நோக்குடன் துயரத்தையும் கலந்தது போல் இருக்கிறது.
படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Glimpse-ல் பின்னணியில் வரும் “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக அப்பாடலில் வரும் கோரஸ் பகுதிகள் நமக்கு goosebumps ஏற்றுவது போல் இருந்தது.
இந்நிலையில் சற்று முன் இத்திரைப்படத்தின் முதல் “single” வெளிவந்துள்ளது. “காலத்துக்கும் நீ வேணும்” என தொடங்கும் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் ரசிக்கும்படியும் உள்ளது. தாமரையின் வரிகள் மிளிர்கின்றன. இப்பாடலை நடிகர் சிலம்பரசனும் ரக்சிதா சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர்.
இப்பாடல் வெளிவந்த சில நிமிடங்களிலேயே 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. எப்போதும் கௌதம் – ரகுமான் – தாமரை கூட்டணி ரசிகர்களை ஏமாற்றாது என்ற கருத்து உண்டு. அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர் மூவரும்.
