TELEVISION
“பாம்பை பார்த்து தெறித்து ஓடிய வெங்கடேஷ் பட்”; கோமாளிகள் கும்மாளம்
செஃப் வெங்கடேஷ் பட் பாம்பை பார்த்து தெறித்து ஓடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி சென்ற வாரம் மிகவும் கலகலப்பாக சென்றது. எலிமினேஷன் வாரம் என்ற டென்ஷனுடன் கொஞ்சம் கலகலப்பாகவும் குக்குகள் சமைத்து அசத்தினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாட்ஷா ரஜினி கெட் அப்பில் வந்த மணிமேகலை வித்யூலேகாவையும் கிரேஸையும் குறிப்பிட்டு “இது வரை எலிமினேஷன் ரவுண்டுக்கு செல்லாத இரண்டு குக்குகள் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டிற்கு செல்வார்கள்” என கேலியாக சொன்னார்.
ஆனால் இறுதியில் கிரேஸ் எலிமினேட் ஆகி வெளியேறினார். மணிமேகலை கேமராவை பார்த்து “எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை மக்களே” என கூறினார். எனினும் சென்ற வார நிகழ்ச்சியில் கோமாளியின் சேட்டைகள் படு பயங்கரமாக இருந்தன.
மணிமேகலை ரப்பர் பாம்பு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குக்குகளையும் பயம் காட்டி வந்தார். ஆனால் முத்துக்குமார் மட்டும் பயப்படாமல் பாம்பை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பாடு ரெடி செய்யலாம் என கேலி செய்தார்.
அதன் பின் மணிமேகலை செஃப் வெங்கடேஷ் பட்டிடம் கொண்டு சென்றார். அவர் பாம்பை பார்த்ததும் அரண்டு போய் கத்தி விட்டார். கோமாளிகளுக்கு படு ஜோராக இருந்தது. எப்போதும் வெங்கடேஷ் பட்டை பார்த்து கோமாளிகள் பயப்படுவார்கள். ஆனால் வெங்கடேஷ் பட் ரப்பர் பாம்பை பார்த்து பயந்ததை கோமாளிகள் கேலி செய்து சிரித்தனர்.
குரேஷி “ஊர் உலகமே பயப்புடுற என் தலைவன், ஒரு ரப்பர் பாம்புக்கு பயப்படுறாரா?” என கிண்டல் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.