Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெங்கட் பிரபுவின் கனவை சல்லி சல்லியாக நொருக்கிய லோகேஷ் கனகராஜ்…

CINEMA

வெங்கட் பிரபுவின் கனவை சல்லி சல்லியாக நொருக்கிய லோகேஷ் கனகராஜ்…

வெங்கட் பிரபு கமல் ஹாசனை வைத்து எப்படிப்பட்ட திரைப்படம் எடுக்க நினைத்தாரோ அதனை லோகேஷ் கனகராஜ் செய்துள்ளார்.

கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 370 கோடியை தாண்டி கலெக்சன் அள்ளிக் கொண்டிருக்கிறது. “பாகுபலி 2” திரைப்படத்தின் சாதனையை “விக்ரம்” ஓவர் டேக் செய்து கொண்டிருக்கிறது.

அது மட்டும் அல்லாது கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.

மேலும் சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பல திரையரங்குகளில் இன்றும் “விக்ரம்” திரைப்படம் வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திவ்யதர்ஷினி தொகுப்பாளராக பங்குபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.

அதில் திவ்யதர்ஷினி வெங்கட் பிரபுவிடம் “கமல் ஹாசனை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால், எப்படிப்பட்ட திரைப்படத்தை இயக்குவீர்கள்?” என ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “நான் கமல் ஹாசனை வைத்து விக்ரம் பார்ட் 2 எடுப்பேன்” என கூறினார். மேலும் “விக்ரம் படம் போல் ஒரு இந்தியானா ஜோன்ஸ் வகையான ஒரு படத்தை தான் நான் கமல் ஹாசனை வைத்து இயக்குவேன்” என கூறினார்.

இந்த வீடியோ இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. தற்போது “விக்ரம்” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளதால் “நீங்க ரொம்ப லேட் வெங்கட் பிரபு” என நெட்டிசன்கள் கம்மென்ட் அடித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top