CINEMA
பிரம்மாண்டமாக நடைபெற உள்ள சிம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ ன்னு தெரியுமா?
சிம்பு நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் எஸ். டி. ஆர். , ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜெயமோகன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் glimpse சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சிம்பு மாறுபட்ட தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து கூலிக்காக மும்பைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் அவரே பாடிய இப்பாடல் உலகத் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “காலத்துக்கும் நீ வேண்டும்” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வைத்து “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
I am happy to welcome u all for the Grand Audio Launch of @SilambarasanTR_ – @menongautham’s #VendhuThanindhathuKaadu. Witness the Live concert of @arrahman at the launch on Sep 2nd at 5pm, Vels University, Pallavaram!#VTKFromSep15@VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/YiVkEtRbpA
— Dr Ishari K Ganesh (@IshariKGanesh) August 18, 2022