CINEMA
அனைவரும் எதிர்பார்த்த அந்த சிம்பு பட பாடல் வெளிவரப்போகுது!!
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளிவர உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் எஸ். டி. ஆர். , ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜெயமோகன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் glimpse சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சிம்பு மாறுபட்ட தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து கூலிக்காக மும்பைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவருகிறது. படத்தின் “colour tone” புதிதாகவும் ஒரு வித அழகியல் நோக்குடன் துயரத்தையும் கலந்தது போல் இருந்தது.
படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Glimpse-ல் பின்னணியில் வரும் “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக அப்பாடலில் வரும் கோரஸ் பகுதிகள் நமக்கு goosebumps ஏற்றுவது போல் இருந்தது.
Glimpse பின்னணியில் இடம்பெற்ற அந்த பாடல் எப்போது வெளிவரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பாடல் வெளியாவது குறித்தான ஒரு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “மறக்குமா நெஞ்சம்” பாடல் வருகிற 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டிருக்கின்றனர்.
The Soulful song u all have been waiting for ! #MarakkumaNenjam from @SilambarasanTR_ – @menongautham‘s #VendhuThanindhathuKaadu releasing On Aug 14th 6:21 PM! ❤️#VTKFromSep15
Lyrics By @Kavithamarai
An @arrahman Musical
#SilambarasanTR @IshariKGanesh @VelsFilmIntl pic.twitter.com/8AFD7xp5mh— Vels Film International (@VelsFilmIntl) August 11, 2022
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “காலத்துக்கும் நீ வேண்டும்” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது “மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளிவர உள்ளது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
