Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“என்னோட அம்மா pregnant ஆ இருக்காங்களா?”.. ஆர் ஜே பாலாஜி திரைப்படத்தின் கலகலப்பான டிரைலர்

CINEMA

“என்னோட அம்மா pregnant ஆ இருக்காங்களா?”.. ஆர் ஜே பாலாஜி திரைப்படத்தின் கலகலப்பான டிரைலர்

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வந்த “வீட்ல விஷேசம்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆர். ஜே. பாலாஜியின் குரல் தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான குரல் என்றாலும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து ஒரு நடிகராக பரவலாக அறியப்பட்டார்.

ஐ பி எல் போட்டிகளில் இவரது கிரிக்கெட் கமென்ட்ரிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. “நானும் ரவுடி தான்” திரைப்படத்தை தொடர்ந்து “எல் கே ஜி” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். “Political satire” வகையரா திரைப்படமான “எல் கே ஜி” ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். அத்திரைப்படமும் கலக்கலான வெற்றியைப் பெற்றது.

இதனை தொடர்ந்து “வீட்ல விஷேசம்” என்ற திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ், குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் “பதாய் ஹோ” என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் கலகலப்பான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. ஹீரோவின் 50 வயதான தாய் pregnant ஆகிறார். இதனை சுற்றத்தார்கள் கேலியாக பார்க்கிறார்கள். இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்ற உணர்வு போராட்டமே இந்த கதை. ஆனால் மிகவும் கலகலப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைபடத்தை ஆர். ஜே. பாலாஜி, என். ஜே. சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். கிரீஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

                                   

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top