CINEMA
திகில் கிளப்பும் வாணி போஜன்…. அட்டகாசமான மோஷன் போஸ்டர்
வாணி போஜன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மிரள்” திரைப்படத்தின் திகிலூட்டும் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது.
சின்னத்திரை தொடர்கள் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் வாணி போஜன். இவர் திரையுலகில் “ஓர் இரவு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் அறிமுகமான இவர் “ஓ மை கடவுளே” திரைப்படம் மூலம் பரவலான கதாநாயகியாக அறியப்பட்டார்.
அதன் பின் “லாக்கப்”, “மலேஷியா டூ அம்னீஷியா”, “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்”, “மஹான்”, “பகைவனுக்கு அருள்வாய்”, “கேஷினோ”, “பாயும் ஒளி நீ எனக்கு” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் “லவ்”, “ஊர் குருவி”, “ரேக்ளா” போன்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது “மிரள்” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹாரர் திரைப்படமாக உருவாக உள்ளது.
இந்நிலையில் “மிரள்” திரைப்படத்தின் திகிலூட்டும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பத்திலேயே திகிலூட்டும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. அதன் பின் ஹாரர் திரைப்படத்திற்குரிய பின்னணி இசையுடன் ஒரு பயமூட்டும் உருவம் தெரிகிறது. அதன் பின் அந்த உருவத்தை தொடர்ந்து வாணி போஜன், பரத் ஆகியோர் எதையோ பார்த்து பயப்படுவது போன்ற முக பாவனைகளோடு தென்படுகிறார்கள்.
இதனை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான ஒரு ஹாரர் திரைப்படமாக “மிரள்” உருவாக உள்ளதாக தெரிகிறது. ஒரு காலத்தில் Stunning actor ஆக வலம் வந்த பரத், நடுவில் சறுக்கி காணாமலே போனார். அதன் பின் சமீபத்தில் “ஸ்பைடர்”, “சிம்பா”, “காளிதாஸ்”, போன்ற திரைப்படங்களின் மூலம் Come back கொடுத்து வந்தார். மேலும் மலையாளத்தில் “குருப்” என்ற திரைப்படத்திலும் நடித்தார். அதன் பின் பல மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த “ராதே” திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “மிரள்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.