Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வாணி போஜன் deleted scenes in மகான்”…திரைப்படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

CINEMA

“வாணி போஜன் deleted scenes in மகான்”…திரைப்படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான “மகான்” திரைப்படத்தில் வாணி போஜன் நடித்த deleted காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளிவந்த திரைப்படம் “மகான்”. இத்திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் போன்றோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் மது குடிப்பதால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளையும் அதனால் தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் அழகாக காட்சிப் படுத்தி இருந்தனர். காந்தி மகான் கதாப்பாத்திரத்தில் விக்ரம் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் சிம்ரன், துருவ் விக்ரம் ஆகியோர் தங்களது கதாப்பாத்திரங்களை கச்சிதமாக ஏற்று நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை ஒரு பெரிய பலமாக அமைந்தது. இத்திரைப்படத்தை “பீட்சா”, “ஜிகர்தண்டா”, “இறைவி”, “பேட்ட” போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் அறிவிப்பு வந்த போது வாணி போஜன் இத்திரைப்படத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் திரைப்படத்தில் அவர் நடித்த ஒரு காட்சி கூட இடம் பெறவில்லை. இது குறித்து ஒரு பேட்டியில் வாணி போஜனிடம் கேட்ட போது அவர் “மகான் திரைப்படத்தில் என்னுடைய காட்சிகள் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தொடர்பில்லாமல் இருந்ததால் நீக்கி விட்டார்கள். ஆனாலும் விக்ரம் போன்ற பெரிய நடிகருடன் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் “மகான்” திரைப்படத்தில் வாணி போஜன் நடிப்பில் இடம்பெற்றிருந்த deleted காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது. அவர் இடம்பெற்ற காட்சிகள் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாணி போஜன் நடித்த deleted காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

                               

Continue Reading

More in CINEMA

To Top