CINEMA
“கமல் சார், உங்களை ஜெயிச்சதுக்கு Happy!!”.. கமல் ஹாசனை புது விதமாக பாராட்டிய பிரபல அரசியல்வாதி
கமல் ஹாசனை தேர்தலில் தோற்கடித்த பெண் அரசியல்வாதி “விக்ரம்” திரைப்படத்தை பார்த்து விட்டு கமலை வித்தியாசமான முறையில் பாராட்டி உள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனாலும் பல திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் 90 சதவிகித Seat Occupancy உடன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
“விக்ரம்” திரைப்படம் வெளியான இந்த ஒரு மாத காலத்தில் தற்போது வரை இத்திரைப்படம் உலகளவில் ரூ. 410 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கமல் ஹாசனின் திரைப்பயணத்திலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளதால் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும், துணை இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார்.
மேலும் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்காக சிறு பங்காற்றிய விதத்தில் “ரோலக்ஸ்” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்தார்.
“விக்ரம்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே புரோமோஷன் வேலைகளில் கமல் தீயாக செயல்பட்டார். அதற்கு பெரும் பயன் கிடைத்தாகவே சொல்ல வேண்டும்.
“விக்ரம்” திரைப்படம் மூலம் தற்போது கமல் ஹாசன் ஜெயித்துள்ள நிலையில் தற்போது கமல் ஹாசனை தோல்வியில் ஆழ்த்திய பெண் அரசியல்வாதி “விக்ரம்” திரைப்படத்தை குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் கமல் ஹாசன். அவரை எதிர்த்து போட்டியிட்ட பல கட்சி வேட்பாளர்களில் ஒருவர் வானதி சீனிவாசன். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.
தேர்தலில் இவருக்கும் கமலுக்கும் தான் கடைசி வரை இழுபறியாக இருந்தது. எனினும் வானதி சீனிவாசன் இறுதியில் ஜெயித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது வானதி சீனிவாசன் “விக்ரம்” திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்களது கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்” என பாராட்டி உள்ளார்.
Feeling happy to have won you in Assembly Elections.
Watched #Vikram! Keep entertaining us Mr.@ikamalhaasan!
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.#விக்ரம் திரைப்படம் பார்த்தேன்.
உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். pic.twitter.com/lr7Oi0WI19
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 4, 2022
