CINEMA
திடீரென பண்ணாரி அம்மன் கோவிலிலுக்கு வந்த வடிவேலு.. ரசிகர்கள் உற்சாகம்..
நகைச்சுவை நடிகர் வடிவேலு திடீரென பண்ணாரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலு, தனது நகைச்சுவையால் பல எளிய மக்களின் வாழ்வில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்தார். இவர் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் உற்சாகமடைவார்கள். அந்த அளவுக்கு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நீங்கா இடத்தைப் பிடித்தவர் வடிவேலு.
காமெடி நடிகராக மட்டுமல்லாது குணச்சித்திரமாகவும் கலக்கக் கூடியவர் வடிவேலு. மேலும் இவர் கதாநாயகனாக நடித்த “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போதும் அத்திரைப்படத்தை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
வடிவேலு தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் லாரன்ஸ் ராகவேந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பி வாசு இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் வடிவேலு திடீரென சாமி தரிசனம் செய்தார். இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின் அங்கிருந்த ரசிகர்கள் பலருடனும் வடிவேலு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து வடிவேலு மீண்டும் அங்கிருந்து மைசூருக்கு கிளம்பினார். வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கிறார் என தெரிந்தவுடன் அருகில் உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் அங்கு திருவிழா போல் காட்சி தந்தது.