CINEMA
வடிவேலு பட காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி…
வடிவேலுவுடன் காமெடி நடிகராக நடித்த முன்னணி நடிகர் தற்போது மருத்துவமனையில் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்க வந்து அதன் பின் காமெடி வேடத்தில் நடித்து வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் கலக்கியவர்.
“தலை நகரம்” திரைப்படத்தில் வடிவேலு நாய் சேகர் கெட் அப்பில் கலக்கி எடுத்திருப்பார். அத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு வாண்டடாக போலீஸ் வண்டியில் ஏறி ஸ்டேஷனுக்கு வருவார். அப்போது அவரை பிரகாஷ் ராஜ் விசாரிக்கையில் “பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மண்ட் வீக்” என்று வடிவேலு பேசும் வசனத்தை நம்மால் மறக்க முடியாது. அதில் வடிவேலுவை கொரில்லா செல்லில் தூக்கி போடுவார்கள். அங்கே வெங்கல் ராவ் ஆடை இல்லாமல் இருப்பார்.
இந்த காட்சி மிகவும் பிரபலமான நகைச்சுவை காட்சி ஆகும். அதே போல் ஒரு திரைப்படத்தில் வெங்கல் ராவ்வின் தலையை பிடித்துக் கொண்டே வடிவேலு வருவார். தலையை விட்டால் சங்கை கடித்து விடுவார் என பல நாட்கள் வடிவேலு வெங்கல்ராவ்வின் தலையை பிடித்துக் கொண்டே வருவார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் பிரபலமான நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவுடன் வெங்கல் ராவ் இணைந்து கலக்கி இருப்பார். சமீபத்தில் வெங்கல் ராவ் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தான் ஒரு சிறு வீட்டில் வசித்து வருவதாகவும், பொருளாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது வெங்கல் ராவ் விஜய்வாடா அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.