CINEMA
சந்திரமுகியில் மீண்டும் இணையும் வடிவேலு; கலக்கலோ கலக்கல்
“சந்திரமுகி 2” திரைப்படத்தில் லாரன்ஸுடன் வடிவேலு இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று “சந்திரமுகி 2” திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
“சந்திரமுகி” திரைப்படம் ரஜினி காந்தின் மாஸ் கலந்த ஒரு ஹாரர் திரைப்படமாக மக்களை வெகுவாக கவர்ந்தது. தெற்கே இருக்கும் அறையை காண்பிக்கும் போதெல்லாம் பார்வையாளர்களுக்கு வயிற்றை கலக்கியது.
அதிலும் ஜோதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். சந்திரமுகியாக அவ்வப்போது மாறும்போது பார்வையாளர்களை அவரது கண்களாலேயே பயமுறுத்திவிடுவார். அதுவும் குறிப்பாக “காசு மாலை, நெட்டிசுட்டி” என சந்திரமுகியின் நகைகளை அணிந்து பார்க்கும்போது அவர் கொடுக்கும் ரியாக்சன் நம்மை நடுங்க வைத்துவிடும்.
“சந்திரமுகி” திரைப்படம் என்றாலே நமக்கு முதலில் நினைவில் வருவது “ரா ரா” பாடல் தான். அப்பாடல் அத்திரைப்படம் வந்த போது வேற லெவல் ரீச் ஆனது. கல்லூரியிலோ பள்ளியிலோ எந்த கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, “ரா ரா” பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவுக்கு அப்பாடல் மக்களை கவர்ந்தது.
இதற்கு அடுத்தாக நமக்கு நினைவில் வருவது வடிவேல் காமெடி தான். குறிப்பாக “மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு” என்ற நகைச்சுவை வசனம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது. “சந்திரமுகி” திரைப்படம் ஹாரர் திரைப்படமாக இருந்தாலும் வடிவேல் நகைச்சுவைக்கு என்றே தனி இடம் இருந்தது.
இந்நிலையில் லாரன்ஸ் நடிக்கும் “சந்திரமுகி 2” திரைப்படத்திலும் வடிவேலு இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)