CINEMA
“வாத்தி” தனுஷின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் எப்போ ன்னு தெரியுமா?
தனுஷ் நடிப்பில் உருவான “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு குறித்தான முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தனுஷ் தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். தனுஷ் நடித்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இதில் தனுஷ் சில காட்சிகளே வந்திருந்தாலும் சண்டை காட்சியில் மிரட்டி எடுத்துவிட்டார்.
மேலும் தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற திரைப்படமும் வெளிவர தயாராக உள்ளது. இதில் தனுஷ் Cow Boy ஆக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது Period Film எனவும் தெரிய வருகிறது. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் கதை நகர்கிறது என சில செய்திகள் தெரிவிக்கின்றது.
இதனிடையே தனுஷ் “வாத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு குறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 27 ஆம் தேதியும் “வாத்தி” திரைப்படத்தின் டீசர் வருகிற 28 ஆம் தேதியும் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
#Vaathi #Sir pic.twitter.com/UzrDY0Nkmx
— Dhanush (@dhanushkraja) July 25, 2022