CINEMA
“தி லெஜண்ட்” நாயகிக்கு பணத்தை வாரி கொடுத்த அண்ணாச்சி.. எவ்வளவு கோடி தெரியுமா?
“தி லெஜண்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரதுலாவுக்கு எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா?
“தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த 28 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஊர்வசி ரதுலா. இவர் ஆசியாவில் அதிகளவிலான ஃபாலோயர்ஸைக் கொண்ட நடிகை ஆவார். ஹிந்தியில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஊர்வசி ரதுலாவுக்கு லெஜண்ட் சரவணன் வழங்கிய பல கோடி ரூபாய் சம்பளம் குறித்தான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஊர்வசி ரதுலாவிற்கு ரூ. 20 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வியந்துபோய் உள்ளனர்.
ஏனென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே ரூ. 10 கோடி தான் ஊதியம் வாங்குகிறாராம். ஆனால் ஊர்வசி ரதுலா ரூ. 20 கோடி வாங்கியுள்ளாராம். இதனால் கோலிவுட் வட்டாரங்கள் வாயை பிளக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு ஆடியன்ஸ்கள் நெகட்டிவ் ரிவ்யூக்களே அளித்த வண்ணம் இருந்தனர். இதனால் இத்திரைப்படம் தோல்வியையே தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நெகட்டிவிட்டியை எல்லாம் தகர்க்கும் விதமாக உலகம் முழுவதும் ரூபாய் இரண்டு கோடியை அள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கங்கனா ரனாவத்தின் “தாகத்” திரைப்படத்தின் வசூலை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஊர்வசி ரதுலா, கீதிகா திவாரி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ ஷங்கர், மயில்சாமி, விவேக், தேவதர்ஷினி, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
