CINEMA
“என் கண்ணு வேணும் ன்னு கேட்டியாமே”… Fan boy டைரக்டர் லோகேஷின் தரமான சம்பவம்
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த “விக்ரம்” திரைப்படம் வெளியான நிலையில் கமல் ஹாசனின் கண்கள் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று வெளியானது. ரசிகர்கள் 4 மணி காட்சிக்கே திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் 4 வருடங்கள் கழித்து கமல் ஹாசனின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
திரையரங்கினுள் பலரும் கமல் ஹாசன் திரையில் தோன்றும் போது அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்தில் பலரும் படம் பிளாக் பஸ்டர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது உலக நாயகன் கமல் ஹாசன் என டைட்டில் தோன்றும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
இப்புகைப்படம் கமல் ஹாசன் பத்து வேடங்களில் கலக்கிய “தசாவதாரம்” திரைப்படத்தில் தோன்றிய டைட்டில் ஆகும். லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் இதற்கு முன் கமல் ஹாசன் நடித்த திரைப்படங்களின் தாக்கத்தால் பல Reference-களை எடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.
அதாவது ஒரு Fan Boy ஆக கமல் ஹாசனுக்கு இத்திரைப்படத்தை பரிசாக வழங்குவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு கமல் ரசிகர் ரசிக்ககூடிய அனைத்தும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் உலக நாயகன் கமல் ஹாசன் என டைட்டில் தோன்றும் போது அனைவரும் ரசித்த தசாவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற டைட்டிலை “விக்ரம்” திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி இருக்கிறார். ஆதலால் ரசிகர்கள் உற்சாக துள்ளலில் இருக்கிறார்கள்.
