CINEMA
நைட்டு 12 மணிக்கு அப்படி என்ன அப்டேட் விட போறார் உதயநிதி…??
உதயநிதி ஸ்டாலின் இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் வாங்கி வெளியிட்டும் வருகிறார். சமீப காலமாக “ராதே ஷ்யாம்”, “விக்ரம்”, “டான்”, “குலுகுலு”, “லால் சிங் சத்தா”, “காத்து வாக்குல் ரெண்டு காதல்” என பல திரைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் “கோப்ரா”, “கேப்டன்” “சர்தார்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களையும் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிடுகிறார். இந்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதாவது இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு ஒரு பெரிய அறிவிப்பு வெளிவர இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். கமென்ட் பகுதியில் பலரும் “பொன்னியின் செல்வன்”, “இந்தியன் 2” “AK 61” என பல திரைப்படங்களின் பெயர்களை வியூகத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் “அது ஏன் இரவு 12.01 மணிக்கு வெளியிடுகிறார்? “ என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது “மாமன்னன்”, “கலகத் தலைவன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற “டான்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் “இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என கூறினார். அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தையும் “AK 61” திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்கி வெளியிட உள்ளார் எனவும் கிசுகிசுக்கள் பரவி வந்தது. எனினும் தற்போது உதயநிதி ஸ்டாலின் எந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்பதை இரவு வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
