CINEMA
உதயநிதிக்கு போட்டி உதயநிதியே தான்…? பிளான் பண்ணி பண்ண சம்பவம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் “சர்தார்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
கார்த்தி நடித்த “சர்தார்” திரைப்படத்தை சமீபத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் வாங்கினார். இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் “AK 61” திரைப்படத்தையும் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது. “AK 61” திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் வருகிற தீபாவளி அன்று “AK 61” திரைப்படம் வெளிவரும் என கூறியிருந்தார்.
இதனால் இரண்டு திரைப்படங்களையுமே உதயநிதி தான் வெளியிடப் போகிறார் என தகவல்கள் வருகிறது. அதுவும் இரண்டு திரைப்படங்களும் தீபாவளி அன்று தான் வெளியாகிறதாக அறியப்படுகிறது.
இதில் என்ன சிக்கல் என்றால், இரண்டுமே மாஸ் ஹீரோ திரைப்படங்கள், ஆதலால் திரையரங்குகள் அதிகம் தேவைப்படும். இதனால் இரண்டில் எதாவது ஒரு திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் சம யோஜிதமாக ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அதாவது இரண்டு திரைப்படங்களும் தீபாவளி அன்றே வெளிவரட்டும், ஆனால் தியேட்டர்களை சமமாக பங்கு பிரித்து வெளியிட வேண்டும் என தீரமாக முடிவெடுத்துள்ளாராம். இந்த சிந்தனை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். உதயநிதி ஸ்டாலின் நல்ல நடிகர் மட்டும் அல்லாது நல்ல விநியோகஸ்தரும் கூட என இதில் நிருபித்துவிட்டதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் “ராதே ஷ்யாம்”, “காத்து வாக்குல் ரெண்டு காதல்”, “டான்”, “விக்ரம்” என பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். “விக்ரம்” திரைப்படம் அசூர வசூல் வேட்டையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.