CINEMA
ஆண்டவர் திரைப்படத்தில் சின்னவர்?.. கமலே வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..
கமல் ஹாசன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கமல் ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்டேஷனல் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பல ஆண்டுகளாக சினிமாவில் உலக நாயகனாக பயணித்து வரும் கமல் ஹாசன் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷனல் தயாரித்த சமீபத்தில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசனின் சினிமா பயணத்திலேயே சிறந்த வெற்றித் திரைப்படமாக அமைந்தது. உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது “விக்ரம்”.
இதனை கொண்டாடும் வகையில் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் துணை இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
மேலும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்திருந்தார். “விக்ரம்” திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிட்டார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல் ஹாசன் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். அத்திரைப்படத்தில் கமல் ஹாசனே நடிக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார். அதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நேற்று ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்தின் 15 வருட பயணத்தை கொண்டாடும் வகையில் அத்தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்கேற்ற பலரையும் கௌரவிக்கும் விதத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின், அமீர் கான் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கமல் ஹாசன் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
15 வருட @RedGiantMovies_-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான
அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி. pic.twitter.com/SA0rc7uItW— Udhay (@Udhaystalin) July 26, 2022
