Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நானும் உதயநிதியும் பொண்ணுங்களை சைட் அடிக்கிறதுக்காகவே இதை பண்ணுவோம்”; விஷாலின் ஓபன் டாக்

CINEMA

“நானும் உதயநிதியும் பொண்ணுங்களை சைட் அடிக்கிறதுக்காகவே இதை பண்ணுவோம்”; விஷாலின் ஓபன் டாக்

“லத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தனது பள்ளி காலங்களின் சேட்டைகளை உதயநிதியும் விஷாலும் ஓப்பனாக மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

விஷாலின் நடிப்பில் உருவான “லத்தி” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

“லத்தி” திரைப்படத்தை ராணா புரொடக்சன்ஸ் சார்பாக நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்துள்ளனர். பாலசுப்ரமணியன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று “லத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சுனைனா, உதயநிதி ஸ்டாலின் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் மேடையில் வந்து டீசரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் உதயநிதியிடம், விஷாலுடன் பள்ளிக் காலத்தில் ஒன்றாக படித்த அனுபவங்களை பகிருமாறு கேட்டார்.

அதன் பின் பேசிய உதயநிதி “நானும் விஷாலும் ஒன்றாக படித்தோம் என கூறினீர்கள். நானும் விஷாலும் ஒன்றாக ஸ்கூலுக்கு போனோம், காலேஜுக்கு போனோம். அவ்வளவு தான்” என நகைச்சுவையாக கூறினார்.

உடனே விஷால் மேடையில் ஏறிவிட்டார். அதன் பின் பேசிய விஷால் “புதிதாக கட்டப்போகும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் கலைஞர் பெயரும் ஸ்டாலின் பெயரும் வரவேண்டும் என்பதே எனது ஆசை” என கூறினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே உதயநிதி ஸ்டாலின் “அந்த கட்டிடத்தை சீக்கிரம் கட்டுங்கப்பா. அதுல தான் இவன் கல்யாணம் பண்ணப்போறேன்னு வேற சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்கான்” என கலகலப்பாக கூறினார்.

அதன் பின் தனது பள்ளி நினைவுகள் குறித்து பேசிய விஷால் “எங்கள் பள்ளியில் இண்டர்ஸ்கூல் கல்ச்சரல்ஸ் புரோகிராம் நடக்கும். அப்போது அந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தருவோம். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் சைட் அடிப்பதற்காகத் தான் செல்வோம்” என கூறினார். இதனை கேட்டு உதயநிதி வம்புல மாட்டிவிட்டியே என்பது போல் சிரித்தார். இந்த கலகலப்பான செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top