CINEMA
கமலை தொடர்ந்து சிம்புவுக்கு கோல்டன் விசா…
கமல் ஹாசனை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
சமீபத்தில் கமல் ஹாசனுக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது.
“ஈஸ்வரன்”, “மாநாடு” ஆகிய திரைப்படங்களின் மூலம் Come Back கொடுத்த சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சிம்புவிற்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு, ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் மிக்கவர்களுக்கு கோல்டன் விசா கொடுப்பார்கள். தமிழகத்தில் பார்த்திபன், த்ரிஷா, வெங்கட் பிரபு ஆகியோர் ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். அதே போல் கேரளத்தில் மோகன் லால், பிரித்விராஜ், மம்முட்டி ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோல்டன் விசாவினால் பல சலுகைகள் கிடைக்கும். அதாவது இந்த கோல்டன் விசா பத்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அந்த பத்தாண்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம், தொழில் தொடங்கலாம், அதனை பெறுபவர் மட்டுமல்லாது அவரின் குடும்பமும் அங்கே தங்கிக் கொள்ளலாம்.
பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோல்டன் விசாவை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் பார்த்திபன், த்ரிஷா, வெங்கட் பிரபு, கமல் ஹாசன் ஆகியோரை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி உள்ளது.