CINEMA
“மணி சார்க்கு நான் இவ்வளவு தான்”.. த்ரிஷா ஓபன் டாக்
”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மணி ரத்னமிற்கு நான் யார்? என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை குறித்தான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகிய பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் பிரம்மாண்டமான டீசர் நேற்று வெளிவந்தது.
டீசர் அட்டகாசமாக அமைந்துள்ளது. நடிகர்கள் அனைவரும் கச்சிதமாக அவரவர் கதாப்பாத்திரங்களில் பொருந்தியிருக்கின்றனர். முதல் பாகத்தில் சீயான் விக்ரம் தான் முன்னணி கதாநாயகராக இருப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. டீசரை பார்க்கும் போதும் விக்ரமின் Screen presence –ஏ அதிகமாக உள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் த்ரிஷா, கார்த்தி, மணி ரத்னம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார் என படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய த்ரிஷா “நான் முதலில் ஒன்றை கூறிக்கொள்கிறேன். நான் மணி ரத்னம் சாரின் குந்தவை. அது மட்டும் போதும் எனக்கு” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “பொன்னியின் செல்வன் தமிழ் மக்களுக்கு பெருமையை சேர்க்கும் படம். இந்த படத்தை கொடுத்ததற்கு மணி ரத்னம் சார் க்கு மிக்க நன்றி” என கூறினார். த்ரிஷா “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இளவரசி குந்தவையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
