Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“திருப்பதியில் த்ரிஷா”.. பிறந்தநாளில் சாமி தரிசனம்..

CINEMA

“திருப்பதியில் த்ரிஷா”.. பிறந்தநாளில் சாமி தரிசனம்..

நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய எண்ணற்ற கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் அக்ஷய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு போன்ற பெரிய பெரிய ஸ்டார்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 90’s kid-களின் கனவு கன்னியான த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். இன்றோடு அவருக்கு 39 வயது நிறைவடைகிறது என்றால் நம்மால் நம்பமுடிகிறதா?. “சாமி” திரைப்படத்தில் பார்த்த அதே இளமை, நடிப்பு, நடை, உடை என அனைத்தும் இப்போதும் அவரிடம் குடிகொண்டு தான் இருக்கிறது.

எந்த கதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக நடிக்க கூடியவர் என பலராலும் பாராட்டப்பட்டவர் த்ரிஷா. இன்று அவரது பிறந்த நாளில் #HBDSOUTHQUEEN என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் அவரது ரசிகர்கள் பலர் அவருக்காக ஒரு “Common DP” ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த “Common DP” சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. த்ரிஷா பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “குந்தவை” கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அந்த கதாப்பாத்திரத்தின் “First look” வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அவர் திருப்பதி கோவிலின் முன் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் அங்கிருந்த தனது ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top