CINEMA
“அட்ரா அட்ரா அட்ரா அட்ரா” வெறித்தனமான “Toofan” பாடல் வெளியீடு..
கே. ஜி. எஃப். 2 திரைப்படத்தின் Toofan பாடல் வெளியீடு குறித்து ஒரு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
“கே. ஜி. எஃப்2 ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச்செய்யவும் தவறவில்லை.
இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கே. ஜி. எஃப். திரைப்படம் மட்டுமல்லாது படப்பிடிப்பு செட்டே பயங்கரமாக உள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தங்களது நினைவுகளையும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் மேக்கிங் வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் மிகவும் பரபரப்பாகவும் நேர்த்தியாகவும் வேலை செய்கிறார். மூன்றாயிரத்திற்கும் மேலான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை எப்படி சமாளித்தார்கள் என்று படக்குழுவினர் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அன்னையர் தினம் அன்று “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தின் “அகிலம் நீ” என்ற பாடல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடலான “மெஹபூபா” பாடல் வெளிவந்தது.
இந்நிலையில் வெறித்தனமான “Toofan” முழு பாடல் வெளியீடு குறித்தான தகவல் வந்துள்ளது. அதாவது நாளை காலை 11 மணியளவில் “Toofan” பாடல் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இப்பாடல் திரையில் ஒளித்த போதே பார்வையாளர்களுக்கு goose bumps தொற்றி கொண்டது. இதனை தொடர்ந்து நாளை “Toofan” பாடல் வெளிவரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.
