REVIEW
“தி லெஜண்ட்” பாருங்க, என்ஜாய் பண்ணுங்க… டிவிட்டர் ரிவ்யூ
“தி லெஜண்ட்” திரைப்படம் குறித்து மக்கள் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.
லெஜண்ட் சரவணா நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிக்கே மக்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
வேர்ல்டு லெவல் விஞ்ஞானியாக திகழும் சரவணன், தனது அறிவெல்லாம் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அதனை தொடர்ந்து தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கே தனது கிராம மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு திட்டத்தை துவங்குகிறார். அதன் குறுக்காக சுமன் வருகிறார். சரவணனின் திட்டம் நிறைவேறியதா? சரவணன் சுமனை வென்றாரா? என்பதே படத்தின் கதை.
இந்நிலையில் ரசிகர்கள் பலர் “தி லெஜண்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனத்தையே தெரிவித்து வருகின்றனர். சிலர் சரவணன் நன்றாக நடித்திருக்கிறார் என கூறுகின்றனர். சிலர் படம் மொக்கை என கூறுகின்றனர்.
“தி லெஜண்ட்” திரைப்படத்தின் டிவிட்டர் ரிவ்யூவை தற்போது பார்க்கலாம்.
ஒருவர் “உங்கள் நண்பர்களுடன் செல்லுங்கள், என்ஜாய் பண்ணுங்கள்” என கூறியிருக்கிறார்.
மற்றொருவர் “அவரேஜ்ஜான படம். உங்கள் நண்பர்களுடன் சென்று பாருங்கள்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “பல வருடங்கள் கழித்து ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் கை வண்ணத்தை திரையரங்கில் பார்க்கிறேன்” என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
ஒருவர் “இது ஒரு Spoof படம் போல் உள்ளது. உங்கள் நண்பர்களுடன் செல்லுங்கள், என்ஜாய் பண்ணுங்கள்” என கூறியுள்ளார்.
மற்றொருவர் ஜிகர்தண்டா திரைப்படத்தின் ScreenShot-ஐ பகிர்ந்து “பிளாக் பஸ்டர்” என பகிர்ந்துள்ளார்.
இன்னொருவர் “தி லெஜண்ட் திரைப்படம் முழுக்க முழுக்க திரையரங்கில் காண வேண்டிய திரைப்படம். படம் பக்கா என்டெர்டெயினர். நிச்சயமாக நண்பர்களுடன் சென்று பாருங்கள்” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “தி லெஜண்ட் திரைப்படம் ஒரு Spoof திரைப்படம். சென்டிமென்ட் காட்சிகளில் கூட சிரிப்பு வருகிறது” என கூறியுள்ளார்.