Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சரவணன், தி மோஸ்ட் டேஞ்சரஸ் Scientist”.. அனல் பறக்கும் “தி லெஜண்ட்” டிரைலர்

CINEMA

“சரவணன், தி மோஸ்ட் டேஞ்சரஸ் Scientist”.. அனல் பறக்கும் “தி லெஜண்ட்” டிரைலர்

லெஜண்ட் சரவணன் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படத்தின் அனல் பறக்கும் டிரைலர் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பல பல ஹீரோயின்களுடன் பல பல கெட் அப்களில் தோன்றி பட்டையை கிளப்பி வந்தார். அதனை தொடர்ந்து ஒரு நாள் சரவணன் அருள் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று வந்த தகவல் திரையுலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

மேலும் அத்திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர் என்றதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஆச்சரியம் நிற்காமல் தொடர்ந்தது. அதாவது அத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அது மட்டும் அல்லாமல் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் என்பதும் படத்தொகுப்பு ரூபன் என்பதும் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்திற்கு “லெஜண்ட்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவலும் வந்தது.

இதனை தொடர்ந்து “தி லெஜண்ட்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து பட்டையை கிளப்பியது. குறிப்பாக “மொசலோ” பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. பாடலில் சரவணனின் Dance பலரால் ரசிக்கும்படி அமைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது “தி லெஜண்ட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் வெறித்தனமாக இருக்கிறது. திரைப்படத்தில் சரவணன் ஒரு Scientist ஆக வருகிறார். அவருடைய திறமைகள் எல்லாம் தன் சொந்த கிராமத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிராமத்திற்கு வருகிறார். அங்கே அவரது சாதனைகளுக்கு பலரால் சோதனை வருகிறது. இதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை.

டிரைலரை பார்க்கும்போது அனல் அரசின் ஸ்டண்ட் காட்சிகள் அனல் பறக்கிறது. படத்தில் பக்கா ஆக்சன் காட்சிகள் பல இடம்பெறும் என தெரிய வருகிறது. கதாநாயகியுடன் ரொமான்ஸ் கொஞ்சும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு பக்காவான கமர்சியல் திரைப்படமாக அனைவராலும் ரசிக்கும்படி “தி லெஜண்ட்” அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று “தி லெஜண்ட்” திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

                 

Continue Reading

More in CINEMA

To Top