CINEMA
அடடா! “தளபதி 66” படத்துல இவரும் இருக்காரா??
“தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது தமிழின் முக்கியமான நடிகர் புதிதாக திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் சரத் குமார், ஷாம் ஆகியோர் இணைந்து நடிப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடந்த வேகத்தில், முதல் கட்ட படப்பிடிப்பு உடனே தொடங்கியது. சில நாட்களுக்குள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் இத்திரைப்படத்தில் தமிழின் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறாராம்.
ஆம். “தளபதி 66” திரைப்படத்தில் தமிழில் முக்கிய நகைச்சுவை நடிகரான யோகி பாபு நடிக்கவிருக்கிறாராம். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டாராம். மேலும் இத்திரைப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
யோகி பாபு சமீப காலமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தர்பாரில் ரஜினிகாந்துடன் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் “ரெமோ”, “மான் கராத்தே”, “டாக்டர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) May 3, 2022
விஜய்யுடன் “சர்க்கார்”, “பீஸ்ட்”, போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சர்க்கார்” “பீஸ்ட்” படங்களை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படத்திலும் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
