CINEMA
“குழந்தைகளுடன் தளபதி”.. வெளியானது “வாரிசு” Second Look
விஜய்யின் 66 ஆவது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தின் Second Look போஸ்டர் வெளியாகி உள்ளது.
இன்று விஜய்யின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை 06:01 மணிக்கு விஜய்யின் 66 ஆவது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.
அதில் விஜய் கோட் சூட்டில் ஒரு பிசினஸ் மேக்னட் போல் வெறித்தனமாக தோற்றம் அளிக்கிறார். அவர் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.
இதன் மூலம் இத்திரைப்படத்தில் விஜய் ஒரு பிசினஸ் மேனுக்கு வாரிசாக நடிக்கிறார் என வியூகிக்க முடிகிறது. ஏற்கனவே தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இப்போஸ்டர் வெளியானது.
இதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தின் Second look மற்றும் Third look குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டது. அதாவது இன்று காலை 11:44 மணிக்கு Second look வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
அதன் படி தற்போது “வாரிசு” திரைப்படத்தின் Second Look வெளிவந்துள்ளது.
இதில் விஜய் சில குழந்தைகளுடன் குஷியாக தென்படுகிறார். ஒரு காய்கறி லோடு ஏற்றிய லாரியில் விஜய் தனது லக்கேஜ்ஜுடன் பயணிப்பது போன்ற தோற்றத்தில் தென்படுகிறார். இதனை கொண்டு இது இன்ட்ரோ பாடலாக கூட இருக்கலாம் என வியூகிக்கப் படுகிறது.
அதே போல் இன்று மாலை 05:02 மணிக்கு Third look வெளிவர உள்ளது. இந்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இன்று விஜய் பிறந்த நாளில் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
