Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தளபதி படம் தான் கலெக்சன்ல Top”… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அன்புச் செழியன்

CINEMA

“தளபதி படம் தான் கலெக்சன்ல Top”… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அன்புச் செழியன்

தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் சமீபத்தில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் என தயாரிப்பாளர் அன்புச் செழியன் கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில்  வெளிவரவுள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தின் டிரைலர் சென்ற வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறியுள்ளது.

மேலும் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித், சிம்பு, ராதிகா சரத்குமார் என திரைத் துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியாக கமல் ஹாசன் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது. அவர் பேசுகையில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “கமலை மிரட்டி திரைப்படத்தை வாங்கி விட்டீர்களா? என பலரும் கேட்கின்றனர். நான் அவரை மிரட்டவும் இல்லை, யாரும் கமல் ஹாசனை , மிரட்டவும் முடியாது. மிரட்டினால் பயப்படக்கூடிய ஆளும் அவர் இல்லை” என கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மேலும் அவ்விழாவில் பேசிய சிம்பு “இப்போ ஏதோ PAN INDIA என்றெல்லாம் சொல்கிறார்கள், அந்த” மருத நாயகம்” திரைப்படத்தை ஒரு ஐந்து நிமிடம் போட்டுக் காட்டுங்களேன் இவுங்களுக்கு” என கூறிய போது அரங்கமே அதிர்ந்தது.

இதனிடையே “விக்ரம்” திரைப்பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் அன்புச் செழியன் “சமீபத்தில் அதிகபட்சமாக கலெக்சன் அள்ளிய திரைப்படம் தளபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, அனிரூத் போன்ற இதே கூட்டணி தான் இதற்கு முன் வெற்றி பெற்றது. அதே போல் தற்போது அதே கூட்டணியில் உலக நாயகன் திரைப்படம் அதை விட பெரிய வசூல் ஆகும்” என கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top