CINEMA
திடீரென புதிய வீடு வாங்கிய தளபதி.. எவ்வளவு கோடி தெரியுமா?
நடிகர் விஜய் சென்னையில் பல கோடி ரூபாய்க்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் தற்போது நீலாங்கரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அடையாரில் அவருக்கு பெரிய அலுவலகம் ஒன்று உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புது வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் விஜய். சென்னையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் சுமார் ரூ. 35 கோடிக்கு ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்த வீட்டை அவர் அலுவலகமாக பயன்படுத்தப்போகிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது விஜய் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.