CINEMA
தளபதி பிறந்த நாள் ஸ்பெஷல்!! திரையரங்கு உரிமையாளர் கொடுத்த சர்ப்ரைஸ்
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் “Mash up” காட்சிக்கு தயார் செய்துள்ளது பிரபல திரையரங்கு நிர்வாகம். உற்சாகத்தில் ரசிகர்கள்..
வருகிற 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் 48 ஆவது பிறந்த நாள் வர இருப்பதால் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட முத்துராம் சினிமாஸில் ஒரு அதிரி புதிரியான திருவிழாவுக்கு தயார் செய்திருக்கின்றனர்.
அதாவது விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி முத்துராம் சினிமாஸில் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய சிறப்பு விஜய் “Mash Up” காட்சி ஒன்றை ஒளிபரப்ப திரையரங்கு நிர்வாகம் தயார் செய்துள்ளது. மேலும் திரையரங்கினுள் கேக் வெட்டி கொண்டாடவும் உள்ளனர். காலை 8 மணிக்கு விஜய் “Mash Up” காட்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியாக டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
நடிகர் விஜய் “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். “தளபதி 66” திரைப்படத்திற்கு “வாரிசு” என பெயர் வைத்திருப்பதாக வதந்தி பரவி வருகிறது.
எனினும் வருகிற விஜய் பிறந்தநாள் அன்று திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “தளபதி 66” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
👉Join Thalapathy @actorvijay‘s birthday bash at #GrandeMuthuramCinemas. 🥳\
Exclusively for #Thalapathy fans🔥
🎬Mash up show
🎂Cake cutting
🍦FREE ice creamBook your tickets now at https://t.co/rvee3o7n5Z#Thalapathy #thalapathyfans #ThalapathyVijay #thalapathylove pic.twitter.com/biky4YNdVH
— Grande Muthuram Cinemas (@GrandeCinemas) June 16, 2022
