Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தளபதி பிறந்த நாளுக்கு பிரத்யேகமாக வெளியிடப்பட்ட அசத்தல் Common DP..

CINEMA

தளபதி பிறந்த நாளுக்கு பிரத்யேகமாக வெளியிடப்பட்ட அசத்தல் Common DP..

தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேகமான அசத்தலான Common DP வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வருகிற ஜூன் 22 ஆம் தேதி தனது 48 ஆவது பிறந்நாளை கொண்டாடுகிறார். ஆதலால் விஜய் ரசிகர்கள் அனைவரும் குஷியோடு இருக்கின்றனர். இதற்கு முன்பை விட விமரிசையாக இந்த பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என  ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

எப்போதும் விஜய் பிறந்தநாளுக்கு சிறப்பாக ஒரு Common DP வெளியிடப்படும். இந்த பிறந்தநாளிலும் விஜய்க்கு தரமான Common DP ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த Common DP இதோ…

இந்த Common DP –ஐ ஷைனு என்ற தீவிர விஜய் ரசிகர் வடிவமைத்துள்ளார். அதில் விஜய் முந்தைய படங்களில் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களின் சிலை வடிவம் போல் பல கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு நடுவே விஜய் ஒரு சுத்தியோடு தென்படுகிறார்.

அதாவது அந்த கதாப்பாத்திரங்களை செதுக்கியவர் என அர்த்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Common DP-ஐ நடிகை காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த Common DP தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.

விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 66” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  “தளபதி 66” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

More in CINEMA

To Top