Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தளபதி 67 திரைப்படத்தில் இணையும் த்ரிஷா.. மாஸ் தகவல்..

CINEMA

தளபதி 67 திரைப்படத்தில் இணையும் த்ரிஷா.. மாஸ் தகவல்..

“தளபதி 67” திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்திரைப்படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுகிறது. பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் சமந்தாவின் பெயரும் அடிபடுகிறது.

இந்த நிலையில் தற்போது “தளபதி 67” திரைப்படத்தின் கதாநாயகி குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இதில் விஜய்யுடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தில் தீம் பாடலை தவிர வேறு எந்த பாடல்களும் இடம்பெறாது என கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading

More in CINEMA

To Top