CINEMA
தளபதி 66 கதை இது தானா??
“தளபதி 66” திரைப்படத்தின் கதை இது தான் என இணையத்தில் ஒரு கதை வைரல் ஆகி வருகிறது.
“தளபதி 66” திரைப்படம் முழுக்க முழுக்க Family Entertainer ஆக உருவாகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பே ஒரு தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடப்பள்ளி Family Drama இயக்குவதில் கைத் தேர்ந்தவர் என கூறப்படுவதும் உண்டு.இதனை கொண்டு “தளபதி 66” திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப உறவை மையப்படுத்தி தான் உருவாகி வருவதாக வியூகிக்கப்படுகிறது.
விஜய் நாளை தனது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளதால் இன்று மாலை 06.01 மணிக்கு “தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே “தளபதி 66” திரைப்படத்திற்கு “வாரிசு” என பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் “தளபதி 66” திரைப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இணைந்து ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது. அதாவது பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம், யோகி பாபு என இந்த பட்டியல் நீள்கிறது. இவர்களை தொடர்ந்து குஷ்புவும் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை கொண்டும் “தளபதி 66” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “தளபதி 66” திரைப்படத்தின் கதை இதுவாகத் தான் இருக்கும் என ஒரு கதை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தந்தை மகன் ஆகியோருக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் இத்திரைப்படத்தின் மையக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று “தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ள நிலையில் அதனை கொண்டு திரைப்படத்தின் கதை எதுவாக இருக்கும் என கணித்துவிடலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். “தளபதி 66” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.