CINEMA
இணையத்தில் மீண்டும் கசிந்த தளபதி படத்தின் படப்பிடிப்பு தளம்..
“தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தனது ரசிகர் ஒருவருக்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ கால் செய்த Screenshot வெளியாகி வைரல் ஆனது.
அதன் பின் சமீபத்தில் “தளபதி” 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்தது.
இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது மேலும் உற்சாகம் தருவது போல் மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அப்புகைப்படம் இதோ..
இப்புகைப்படத்தை பகிர்ந்த விஜய் ரசிகர் குழுவின் டிவிட்டர் பக்கம் ஒன்று இது சண்டை காட்சி என குறிப்பிட்டுள்ளது. எனினும் படம் வெளிவரும்போது தான் இக்காட்சி சண்டைக் காட்சியா இல்லையா என்பது தெரிய வரும்.
#THALAPATHY66 Fight Sequence Going On @actorvijay 66 @iamRashmika pic.twitter.com/K4o3ClThTu
— VIJAY_TREND_PAGEவிஜய் மக்கள் இயக்கம்🇦🇷🇦🇷 (@Muthuga54495165) June 10, 2022
“தளபதி 66” திரைப்படத்தில் ராஷ்மிகா மாந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது.
மேலும் சமீபத்தில் கூட தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் வம்சி பைடப்பள்ளி வேண்டுகோளுக்கு இணங்க “தளபதி” 66 திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்ய ஒத்துக் கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
