Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இணையத்தில் Leak ஆன தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்… வைரல் புகைப்படம்

CINEMA

இணையத்தில் Leak ஆன தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்… வைரல் புகைப்படம்

இணையத்தில் “தளபதி 66” படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 66” திரைப்படம் பூஜை ஆரம்பித்த சூட்டோடே படப்பிடிப்பும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அப்புகைப்படம் இதோ..

இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மாந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

பாடல்கள் ஒலிப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் “ஹாய் செல்லம்ஸ்ஸ்ஸ், வீ ஆர் back” என்று குறிப்பிட்டு “தளபதி 66” என்ற ஹேஷ் டேக்கை மென்ஷன் செய்திருந்தார்.

இதற்கும் முன் விஜய் ஒரு ரசிகருக்கு வீடியோ கால் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது அதன் Screenshot இணையத்தில் பரவி வைரலாகின. இவ்வாறு பல புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆவதால் ரசிகர்கள் படு குஷியாக உள்ளனர்.

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்திற்கு பல நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன. மேலும் நெல்சனை பலரும் கலாய்த்து பல மீம்கள் வலம் வந்தன. இந்நிலையில் “தளபதி 66” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top