CINEMA
தலைவர் ஆக்சனுக்கு ரெடி.. இனி சூறாவளி தான்..
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த “ஜெயிலர்” திரைப்படத்தின் அந்த முக்கிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டாக இருக்குமோ? என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த முக்கிய அப்டேட் தற்போது வெளிவந்துவிட்டது. ஆம்!
ஆதாவது இன்று “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. இந்த அறிவிப்பிற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் மாஸ் ஆகவும் ஸ்டைலாகவும் ஒரு கண்ணாடி அணிந்து ஆள் பாக்கவே டெரராக இருக்கிறார்.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் இந்த படத்திற்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஆதலால் இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஜெயிலராக பணியாற்றும் சிறைச்சாலையில் அவருக்கும் ஒரு கேங்குக்கும் நடக்கும் ஆக்சன் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதை என தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் தான் “தலைவரின் ஆக்சன் ஆரம்பம்” என்ற தலைப்போடு இத்திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதனை கொண்டு முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பிளாக் திரைப்படமாக “ஜெயிலர்” உருவாக உள்ளதாக அறியப்படுகிறது.
