CINEMA
நெல்சன் இயக்கும் ரஜினி படத்தின் கதை இது தான்!!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “தலைவர் 169” திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. “பீஸ்ட்” திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தோடு திரையரங்கை விட்டு வெளியே சென்றனர். எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் இருந்தன.
இதனை தொடர்ந்து “பீஸ்ட்” திரைப்படத்தின் இயக்குனர் நெல்சனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். பலரும் “நெல்சன் விஜய்யை வைத்து செய்துவிட்டார்” என பல மீம்களை வெளியிட்டு வந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
சமீபத்தில் கூட ஒரு சமூக ஊடக தொலைக்காட்சியின் விழாவில் பேசிய நெல்சன், “ஏற்கனவே நான் செம்மய்யா மாட்டிருக்கேன்” என கூறியதில் இருந்து அவர் மனதை எந்த அளவுக்கு அந்த மீம்கள் காயப்படுத்தி இருக்கும் என்பதை அறிய முடிந்தது.
இதனிடையே நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169 ஆவது திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளி வந்தது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை பலப்படுத்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குனர் நெல்சனுடன் இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
இந்நிலையில் “தலைவர் 169” திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது சிறை கைதிகளை மையப்படுத்தி தான் படத்தின் கதை இருக்கபோகிறது என பேசப்பட்டு வருகிறது. ரஜினி சிறையின் ஜெயிலராக நடிக்கிறார் எனவும் திரைப்படத்தின் பெயரே “ஜெயிலர்” தான் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.
