Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

துப்பாக்கி பயிற்சியில் தல அஜித்! வைரல் புகைப்படங்கள்..

CINEMA

துப்பாக்கி பயிற்சியில் தல அஜித்! வைரல் புகைப்படங்கள்..

அஜித் “AK 61” திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை அஜித்தின் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் மேற்கண்ட திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

“AK 61” திரைப்படத்தின் அஜித் கெட் அப் பல நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “வலிமை” இயக்கிய ஹெச். வினோத்தே இத்திரைப்படத்தையும் இயக்கி வருவதால் ரசிகர்கள் இடையே எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திரைப்படத்தின் ஒரு பகுதியா என தெரியவில்லை.

சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவான “வலிமை” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மனதை உருக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு பல நெகட்டிவ் ரிவ்யூக்கள் வந்திருந்தாலும் ரசிகர்கள் வலிமையை உற்சாகத்தோடு கொண்டாடினர். இதனை தொடர்ந்து “அஜித் 61” திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்தன. அத்திரைப்படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கப்போவதாக கூறப்பட்டது.

“AK 61” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top