GOSSIPS
தம்பிக்கு போட்டியாக ரிஸ்க் எடுத்து மகனை குழிக்குள் தள்ளிய “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர்… சோகத்தை பாருங்க
தம்பிக்கு போட்டியாக நடிக்கிறேன் பேர் வழி என்று மகனின் பெயருக்கு பங்கம் விளைவித்துள்ளாராம் “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர். ஆனால் அவர் எடுத்த முடிவு பகீர் கிளப்பியுள்ளதாம்.
தெலுங்கில் உச்சத்தில் இருக்கும் அந்த “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர் தற்போது நடிக்கும் சக இளம் நடிகருக்கு போட்டியாகவே நடித்து வந்து கொண்டிருக்கிறாராம். இந்த போட்டி மனப்பான்மை முத்தி போய் தற்போது தம்பியுடனே போட்டி போட்டு மகனின் புகழுக்கும் பங்கம் விளைவித்துள்ளாராம்.
அவரின் தம்பி சமீபத்தில் நடித்த அந்த ரீமேக் திரைப்படம் வேற லெவல் மாஸ் ஹிட் ஆனது. அதற்கு போட்டியாகவே சமீபத்தில் பெரிய பொருட்செலவில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார் “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர். ஆனால் அத்திரைப்படம் படு குழிக்குள் போயுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்துள்ளன.
மேலும் அத்திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் அவரது மகனையும் நடிக்க வைத்தார். இதனால் அவரது மகனின் புகழுக்கும் கலங்கம் வந்துள்ளதாம். இந்த வயதிலும் தன் தலையில் ஆணவத்தை ஏற்றிக் கொண்டு இப்படி படு மோசமான கதையை தேர்ந்தெடுத்து படம் நடித்ததை “எக்ஸ் மினிஸ்டர்” தற்போது உணர்ந்துள்ளாராம்.
ஆதலால் அவர் ஒரு திடுக்கிடும் முடிவை எடுத்துள்ளாராம். இனிமேல் ஹீரோவாக நடிக்கப்போவதில்லையாம். குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடிக்கப்போகிறாராம். கையில் தற்போது வைத்திருக்கும் திரைப்படங்களை முடித்து கொடுத்து விட்டு மாஸ் ஹீரோ அந்தஸ்தில் இருந்து ரிட்டெயர்மெண்ட் வாங்கப்போவதாகவும் முடிவு எடுத்துள்ளாராம். இதனால் தெலுங்கு சினிமா இன்டஸ்ட்ரியே ஷாக்கில் உறைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன.
