CINEMA
“என் உயிருக்கு எதாவது ஆச்சுன்னா இவங்க தான் காரணம்”… விஷால் பட நடிகை பகீர் பதிவு
விஷால் பட நடிகை “எனது உயிருக்கு எதாவது ஆகினால் இவர்கள் தான் காரணம்” என ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். யார் காரணம்? என்ன விஷயம்?
விஷால் நடித்த “தீராத விளையாட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனு ஸ்ரீ தத்தா. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் தன்னை பாலியல் ரீதியாக தவறாக அணுகியதாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் நானா படேகர் மீது தனு ஸ்ரீ தத்தா பாலிவுட்டில் உள்ள நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன் பின் பல காலங்கள் தனு ஸ்ரீ தத்தா எந்த பேட்டியில் கலந்துகொண்டாலும் நானா படேக்கர் மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே வந்தார்.
அதன் பின் 2018 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் “Me Too” குற்றச்சாட்டுகள் பிரபலமான போது, இந்தியாவில் அதனை தொடங்கி வைத்தவரே தனு ஸ்ரீ தத்தா என கூறலாம். 2018 ஆம் ஆண்டு அவர் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் நானா படேக்கர் குறித்து பேசியது தான் இந்தியாவில் “Me Too” பூதாகரமாக வெடித்ததின் தொடக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் தனு ஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பகீர் பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது “எனக்கு என்றாவது எதாவது ஆகினால் அதற்கு நானா படேகரும் அவரது மாஃபியா கும்பலும், அவரது வக்கீல்களுமே காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
தனு ஸ்ரீ தத்தா சில ஆண்டுகளுக்கு முன் “நானா படேக்கரின் ஆட்கள் என் காரை நொருக்கினர்” என பகீரங்க குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் அது நானா படேக்கர் ஆட்கள் இல்லை, வேறொருவர் என பின்னர் தெரிய வந்தது.
View this post on Instagram
