CINEMA
“விக்ரம்” டிரைலரில் சூர்யா…. கண்டுபிடிச்சிட்டீங்களா??
“விக்ரம்” டிரைலர் நேற்று வெளிவந்த நிலையில் சூர்யா அதில் இடம்பெற்ற காட்சி ஒன்று வந்துள்ளதாக இணையத்தில் அக்காட்சி வைரல் ஆகிவருகிறது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் இவ்விழா வருகிற 22 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
டிரைலர் வெறித்தாமாக இருக்கிறது. Full and full action block தான். மாஸ், வேற லெவல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கமலின் கெட் அப் தெறி லுக். விஜய் சேதுபதி பயங்கர வில்லன் போல் காட்சி தருகிறார். ஃபகத் ஃபாசில் கண்களில் வெறி தள்ளாடுகிறது.
அனிருத் பிஜிஎம்மில் மாஸ் காட்டி இருக்கிறார். பட்டாசாக இருக்கிறது ஒவ்வொரு ஃபிரேமும். நிஜமாக ஜூன் 3 அன்று திருவிழா தான் போல. மாஃபியா கும்பல்களுக்கு நடுவே நடக்கும் மோதல் தான் படத்தின் கருவாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது. துப்பாக்கி, மிஷின் ‘gun’ என அனல் பறக்கிறது.
நிஜமகவே “ghost” மோடு தான் போல. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3 அன்று திரையில் ஜொலிக்க உள்ளது. அதுவரை இந்த டிரைலரே போதும் என ரசிகரகள் குஷியாக உள்ளனர்.
இதனிடையே நேற்று டிரைலர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ், “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று “விக்ரம்” டிரைலரில் சூர்யா இடம்பெறும் காட்சிகள் எதுவும் வெளிவந்துள்ளனவா என இணையவாசிகள் decode செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற பெயர் வரும்போது கத்தி எறியும் கதாப்பாத்திரம் தான் சூர்யா என ஒரு அக்காட்சியின் screenshot வைரலாக பரவி வருகிறது. இது நிச்சயமாக சூர்யா தான் என உறுதியாக நம்புகின்றனர் இணையாவாசிகள். எனினும் திரைப்படம் வெளிவந்த பிறகே இதன் உண்மை தன்மை தெரியவரும்..