Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஒரே ஃபோட்டோ தான், எல்லா வதந்தியும் குளோஸ்!! சூர்யா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படம்?

CINEMA

ஒரே ஃபோட்டோ தான், எல்லா வதந்தியும் குளோஸ்!! சூர்யா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படம்?

இயக்குனர் பாலா இயக்கி வரும் “சூர்யா 41” திரைப்படத்தை பற்றிய வதந்திக்கு ஒரே புகைப்படத்தில் மொத்தமாக முற்று புள்ளி வைத்துள்ளார் சூர்யா.

இயக்குனர் பாலா நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய முதல் படமான “சேது” மாபெரும் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் நடிகர் சூர்யாவை வைத்து “நந்தா” என்ற திரைப்படத்தை இயக்கினார். “நந்தா” திரைப்படம் சூர்யாவை சிறந்த நடிகராக வெளிப்படுத்தியது.

அதில் இருந்து சூர்யா-பாலா இருவரின் நட்பும் நெருக்கமானது. அதனைத் தொடர்ந்து விக்ரம்-சூர்யா காம்போவை வைத்து “பிதாமகன்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் “நான் கடவுள்” “அவன்-இவன்” “பரதேசி” “தாரை தப்பட்டை” “நாச்சியார்” போன்ற திரைப்படங்களை இயக்கிய பாலாவிற்கு சூர்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் அமையவில்லை.

மேலும் தெலுங்கில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன “அர்ஜூன் ரெட்டி”திரைப்படத்தை தமிழில் துருவ் விக்ரமை வைத்து இயக்கினார் பாலா. ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளிவரவில்லை.

சில நாட்களுக்கு முன்பு சூர்யாவின் 41 ஆவது திரைப்படத்தை பாலா இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அத்திரைப்படத்தில் கீரீத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இதனிடையே படப்பிடிப்பில் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோருக்கும் இடையே மாற்றுக் கருத்து ஏற்பட்டது எனவும் படப்பிடிப்பில் இருந்து சூர்யா கோபமாக வெளியேறிவிட்டார் எனவும் வதந்திகள் பரவி வந்தன.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் பாலாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சூர்யா பகிர்ந்து உள்ளார். அதில் “படப்பிடிப்பிற்கு திரும்ப காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறியப்படுகிறது.

பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே பிரச்சனை என வதந்தி கிளம்பிய நிலையில் இப்புகைப்படம் அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

Continue Reading

More in CINEMA

To Top