CINEMA
10 மொழிகளில் தயாராகும் சூர்யா திரைப்படம்.. மாஸ் காட்டும் சிறுத்தை சிவா
சிறுத்தை சிவா-சூர்யா ஆகியோர் இணைய உள்ள புதிய திரைப்படம் 10 மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டது.
தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு முன் சூர்யா நடித்த “மாயாவி”, “ஆறு”, “சிங்கம் 1”, “சிங்கம் 2” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 5 ஆவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் இணையவுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் இத்திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டதாக பல தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வேற லெவல் மாஸ் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, என 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளிவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகன் என்ற இரு வேடங்களிலும் சூர்யாவே நடிக்க உள்ளதாக வியூகிக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் டாப் கிளாமர் நடிகையான திஷா படானி நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தான் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் மாஸ் தகவல் வெளிவந்துள்ளது.