Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சூர்யா-சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு பூஜை போட்டாச்சா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

CINEMA

சூர்யா-சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு பூஜை போட்டாச்சா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

சூர்யா-சிறுத்தை சிவா இணையும் “சூர்யா 42” திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படம் இதோ..

தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு முன் சூர்யா நடித்த “மாயாவி”, “ஆறு”, “சிங்கம் 1”, “சிங்கம் 2” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 5 ஆவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட இத்திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்தது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகன் என்ற இரு வேடங்களிலும் சூர்யாவே நடிக்க உள்ளதாக வியூகிக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் டாப் கிளாமர் நடிகையான திஷா படானி நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. “அண்ணாத்த” திரைப்படம் பொருளாதார வெற்றியை பெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன. இந்த நிலையில் தான் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளதாக வைரல் ஆகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top